அத்துமீறி வீடு புகுந்த நபர் போலீசில் பெண் புகார்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே இளம்பெண் வீட்டில் வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த கஞ்சனுார், புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வினிதா, 30; இவர் கடந்த 5ம் தேதி இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தனது குடும்பத்துடன் துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த அரிகோவிந்தன், 35; என்பவர் வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார்.
சத்தம் கேட்டு ஏழுமலை எழுந்து பார்த்ததும் தப்பிச் சென்ற அரிகோவிந்தன் அனைவரையும் உள்ளே வைத்து கதவை பூட்டி சென்றுள்ளார்.
இதுகுறித்து வினிதா அளித்த புகாரின் பேரில் கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement