குறுவட்டார சிலம்பம் போட்டி
முதுகுளத்துார்: முதுகுளத்துார் குறுவட்டார அளவிலான மாணவிகள் சிலம்பம் போட்டி காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தாளாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் முத்துமுருகன், முதல்வர் பிரேமலதா முன்னிலை வகித்தனர். போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி துவக்கி வைத்தார்.
அப்போது முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200க்கும் அதிகமான மாணவிகள் கலந்து கொண்டனர். 14, 17, 19 வயது பிரிவின் அடிப்படையில் ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, தொடு முறை போட்டிகள் நடந்தது. இதில் முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டி நடுவர்களாக முதுகுளத்துார் வட்டாரத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்பட்டனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ராஜசேகர் செய்தார்.