சமூக நல்லிணக்க ஊராட்சி  விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், ஜூலை 8

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் துர்கா தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

சாதி பாகுபாடு அற்ற சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் ஊராட்சிகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை, விருதை தமிழக அரசு வழங்கி வருகிறது.

2026 – 2027க்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்ப படிவம், அதற்குரிய ஆவணங்களை இணைத்து கலெக்டர் அலுவலகத்தில் 2026 ஜூலை 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/social award என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement