நல்லதங்காள் கோயில் கும்பாபிஷேகம்
வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு தாலுகா அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
நேற்று முன் தினம் மாலை புதிய நல்லதங்காள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று காலை 7:40 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி, கும்பங்கள் புறப்பாடுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. காலை 9:40 மணிக்கு மேல் மூலவர் விமானம், பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement