மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

வேடசந்துார், ஜூலை 10

வேடசந்துார் மின்கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் சிறப்பு குறைதீர் கூட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. திண்டுக்கல் மேற்பார்வை பொறியாளர் சைமன் சார்லஸ் தலைமை வகித்தார். வேடசந்துார் செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசுகையில், ‘குறைந்தழுத்த மின் விநியோகத்தால் மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதடைகின்றன, சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.

குடகனாறு பாதுகாப்பு சங்கத்தலைவர் ராமசாமி, வேடசந்துார் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தலைவர் சந்திரசேகர், செயலாளர் நேருமாணிக்கம், மின்நுகர்வோர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement