இதே நாளில் அன்று
ஜூலை 9:
கேரள மாநிலம், ஆலப்புழாவில், குற்றவியல் நீதிபதியாக இருந்த பி.எம்.வர்கி - அச்சம்மா தம்பதியின் மகனாக, 1893ல், இதே நாளில் பிறந்தவர் பி.வி.செரியன்.
இவர், திருவிதாங்கூரில் பள்ளி படிப்பையும், சென்னையில் மருத்துவ படிப்பையும் முடித்தார். சென்னையில், அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றினார். முதல் உலக போர் சமயத்தில், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் கர்நாடிக் காலாட்படையிலும், மெசபடோமியா என அழைக்கப்பட்ட இன்றைய ஈராக் பகுதியிலும் மருத்துவ பணியாற்றினார்.
பின் பிரிட்டன் சென்று, காது, மூக்கு, தொண்டை பிரிவில் பயிற்சி பெற்று, பிரிட்டனின் ராயல் கல்லுாரி யில் அறுவை சிகிச்சை நிபுணர் ஆனார். அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில், சென்னை மாகாண சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஆரோக்கியசாமி, இவரை சென்னை மருத்துவ கல்லுாரியின் முதல் இந்திய கண்காணிப்பாளர் ஆக்கினார்.
பணி ஓய்வுக்கு பின், அரசியலில் ஈடுபட்டு காங்., கட்சி சார்பில் சென்னை மேயர், சட்ட மேலவை உறுப்பினர் ஆனார். மஹாராஷ்டிர மாநில கவர்னராக இருந்த இவர், தன் 76வது வயதில், 1969, நவம்பர் 9ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
மேலும்
-
பங்கு சந்தைகள் 2சதவிகிதம் வீழ்ச்சி முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி இழப்பு
-
போலி மருத்துவர் கைது
-
ஒகேனக்கல் காவிரியாற்றில் கழிவு அகற்றும் பணி
-
பள்ளி வளாகத்தில் தேங்கிய கழிவுநீர் கால்வாயை சீரமைத்த த.வெ.க.,வினர்
-
சேதமான சாலையை சீரமைக்கக்கோரி லாரிகளை சிறை பிடித்த கிராம மக்கள்
-
சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதியின்றி அவதி