கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் 3 நாளுக்கு ரயில் ரத்து
சென்னை: ரயில் பணிமனை மேம்பாட்டு பணி காரணமாக, கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் எட்டு மின்சார ரயில்களின் சேவை, மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கை:
கூடுவாஞ்சேரி பணிமனையில், வரும் 9, 13, 15ம் தேதிகளில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், எட்டு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
கடற்கரை - செங்கல்பட்டு, காலை 11:28; பகல் 12:02; பகல் 12:30; மதியம் 1:45 மணி ரயில்கள் ரத்து செய்யப்படும்
செங்கல்பட்டு - கடற்கரை, மதியம் 1:35 மற்றும் 2:15 மணி; மாலை 3:00 மற்றும் 4:25 மணி ரயில்கள் ரத்து செய்யப்படும்.
சிறப்பு ரயில்கள் பயணியர் வசதிக்காக, கடற்கரை - தாம்பரம், காலை 11:28; பகல் 12:02 மற்றும் 12:30 மணி; மதியம் 1:45 மணிக்கும், தாம்பரம் - கடற்கரைக்கு, மதியம் 2:30; மாலை 3:15; மாலை 4:00 மற்றும் மாலை 5:24 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தரைப்பாலத்தில் ஏறி நின்ற லாரி உயிர் தப்பிய டிரைவர், கிளீனர்
-
பங்கு சந்தைகள் 2சதவிகிதம் வீழ்ச்சி முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி இழப்பு
-
போலி மருத்துவர் கைது
-
ஒகேனக்கல் காவிரியாற்றில் கழிவு அகற்றும் பணி
-
பள்ளி வளாகத்தில் தேங்கிய கழிவுநீர் கால்வாயை சீரமைத்த த.வெ.க.,வினர்
-
சேதமான சாலையை சீரமைக்கக்கோரி லாரிகளை சிறை பிடித்த கிராம மக்கள்