காங்., கட்சியினர் ஊசுடு பத்துக்கண்ணில் ‘ராட்டை சத்தியாகிரக’ அறப்போராட்டம்
வில்லியனுார்: ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு பகுதியில் காங்., கட்சி சார்பில் ஜனநாயகத்தைக் காப்பதற்கான ‘ராட்டை சத்தியாகிரக’ அறப்போராட்டம் நேற்று நடந்தது.
ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு பகுதியில் காங்., கட்சி சார்பில் ஜனநாயகம், இந்திய அரசிலமைப்பு மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுக்காக்கும் நோக்கில் ‘லோக்தந்திர பச்சாவ் சத்யாகிரகம்’ என்ற அமைதி வழி அறப்போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் மத்திய பிரதேச மாநிலங்களவை எம்.பி.,தேர்தலில் காங்., முன்னாள் தேசிய தலைவவர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட அநீதி செயலை கண்டித்தும். வாக்கு திருட்டு, சீட் டு திருட்டை தடுக்கவேண்டும். தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட வேண்டும். பஞ்சாயத்து ராஜ் கிராம சபை அதிகாரங்களை பாதுகாக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து நடந்த அறவழி பேராட்டம் நடந்தது.
அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் சுனில் பன்வார், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன், பாலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
வார தொடக்க முதல் நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு
-
'என் மண், எண் மக்கள்' தொழிற்சங்கம் துவக்கம்
-
அரசு சாட்சியை கொல்ல முயற்சி சிறையில் திட்டம்; 2 பேர் கைது
-
அமெரிக்கா- ஈரான் போர் மீண்டும் தீவிரம்; கச்சா எண்ணெய் விலை உயர்வு
-
எண்கள் சொல்லும் செய்தி
-
'ஜவுளி திறன் மையம்' திருப்பூரில் தொடங்க முதல்வருக்கு கோரிக்கை