வீடு புகுந்து 20 சவரன் நகை கொள்ளை: கச்சிராயபாளையத்தில் துணிகரம்
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம், வேதகார தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 66; கள்ளக்குறிச்சி கூட்டுறவு சார்க்கரை ஆலை அலகு 2ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தனியார் டிட்டர்ஜன்ட் சோப்பு ஏஜன்ட்டாக பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த 6ம் தேதி சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு குடும்பதினருடன் சென்றவர், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் வீட்டிற்கு வந்து துாங்கியுள்ளார்.
காலையில் எழுந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 20 சவரன் சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற எஸ்.பி., ஷஹனாஸ் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து கைரேகை பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.