உலக சாக்லேட் தின போட்டியில் மணக்குள விநாயகர் கல்லுாரி வெற்றி

புதுச்சேரி: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் உலக சாக்லேட் தினத்தை முன்னிட்டு நடந்த தீயின்றி சமையல் போட்டி நடந்தது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் உலக சாக்லேட் தினத்தை முன்னிட்டு 'தீயின்றி சமையல்' தலைப்பில் போட்டி நடந்தது.

இப்போட்டியில், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்களது சமையல் திறன், படைப்பாற்றல் மற்றும் அலங்காரத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மொத்தம் 350 மாணவர்கள் 175 அணிகளாக பங்கேற்ற போட்டியில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பல்வேறு பரிசுகளை வென்றனர். அதில், முதல் பரிசை வணிகவியல் மேலாண்மை துறை 3ம் ஆண்டு மாணவிகள் தேவிஸ்ரீ மற்றும் சாந்தினி ஆகியோரும், 2ம் பரிசை உணவு மற்றும் ஊட்டச்சத்து 3ம் ஆண்டு மாணவிகள் சஹானா மற்றும் ரெய்ச்சல், 3ம் பரிசை இயற்பியல் துறை 2ம் ஆண்டு மாணவிகள் கவியா மற்றும் லோகஸ்ரீ, 5ம் பரிசை வணிக மேலாண்மையியல் 3ம் ஆண்டு மாணவிகள் தேவதர்ஷினி மற்றும் பைசா பேகம் ஆகியோர் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன், இணைச்செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோருடன், கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறைத்தலைவர் கவிதா, ஆங்கிலத்துறை பேராசிரியர் ருக்மணி, கணிதவியல் துறைப் பேராசிரியர் ஞானவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement