விபத்தில் முதியவர் பலி

நத்தம்:நத்தம் அருகே பட்டிகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் 65. இவர் கடந்த ஜூலை.10 தனது பைக்கில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.குட்டுப்பட்டி-புதுார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மணப்பாறையை சேர்ந்த பாபுச்சாமி 48.என்பவர் ஒட்டி வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் ஆறுமுகம் நேற்று இறந்து விட்டார்.இச்சம்பவம் குறித்து போலீஸ்- இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


பைக்குகள் மோதல்-இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி

நத்தம்:நத்தம் அருகே சம்பபட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் 21. தேங்காய் பறிக்கும் தொழிலாளி.இவர் நேற்று மாலை தனது பைக்கில் வீட்டில் இருந்து சேக்கிபட்டி சென்றார்.அப்போது எதிரே சேக்கிபட்டியை சேர்ந்த ராமர் 27. என்பவர் ஒட்டி வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.ராமர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். நத்தம் போலீஸ்-எஸ்.ஐ., அபினேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement