ராஜினாமா செய்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு
சென்னை: பதவியை ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக சபாநாயகரை சந்தித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் விளக்கம் அளித்தனர்.
சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், மதுராந்தகத்தைச் சேர்ந்த மரகதம் குமரவேல், தாராபுரத்தைச் சேர்ந்த சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த இசக்கி சுப்பையா ஆகிய நால்வரும் சட்டசபையில் நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, விஜய் அரசுக்கு சாதகமாக ஓட்டளித்தனர்.
ராஜினாமா செய்வது தொடர்பாக சபாநாயகர் பிரபாகருக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தனர். இவர்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேவேளையில், இந்த 4 பேரின் ராஜினாமாவை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொறடா உத்தரவை மீறியதற்காக, கட்சித்தாவல் தடைச்சட்டத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக சார்பில் சபாநாயகரிடம் புகாரும் அளிக்கப்பட்டது.
அதிமுக புகார் அடிப்படையில், ராஜினாமா செய்தவர்கள் மீது நடவடிக்கை தொடங்கியிருப்பதாக சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அவர்களிடம் விளக்கமும் கேட்டிருந்தார். இந்த சூழலில், இசக்கி முத்துவை தவிர்த்து எஞ்சிய 3 பேரும் இன்று சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
அதிமுக தலைமை இவர்கள் மீது கோர்ட்டில் சிவில்,கிறிமிநள் வளக்கு போட வேன்டும்
இசக்கி முத்துவும் இசக்கி சுப்பையாவும் ஒரே ஆளா? வெவ்வேறு நபர்களா?
இசக்கி சுப்பையா என்பதே சரியான பெயர்.
டெல்லியுள்ள ஒரு மூத்த சட்ட ஆலோசகர் அறிவுரைப்படிதான் ராஜினாமா ட்ராமாவே தொடங்கியது என்ற பேச்சு முதல்லிலிருந்தே இருக்கிறது. அப்பறம் எதுக்கு இப்படி மிருதங்க சக்ரவர்த்தி சிவாஜி மாதிரி ஓவர் ஆக்டிங் .
கொள்கைகளே இல்லாத பச்சோந்திகளை தேர்ந்தெடுத்த வீணாப்போன மக்கள் இது போன்ற வீணாப்போன காரியங்களுக்கே வரிகட்டி செலவு செய்து வீணா போக வேண்டும் வேறு என்ன செய்யமேலும்
-
வீட்டில் விளக்குகள் அமைப்பதில் தவிர்க்க வேண்டிய குறைபாடுகள்!
-
கட்டுமான பொருள் கண்காட்சி; கோலாகல துவக்கம்
-
'கருணாநிதி குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் தி.மு.க., துரோகம்'
-
'மேகதாது அணை கட்டாமல் தடுக்க அரசு நடவடிக்கை'
-
கோவில் நிலங்களை தனியாருக்கு எப்படி பட்டா வழங்க முடியும்? முதல்வர் விளக்கமளிக்க பா.ஜ., வலியுறுத்தல்
-
கடைமடை பகுதி வரை பாசன நீர் விவசாயிகள் வலியுறுத்தல்