கட்டுமான பொருள் கண்காட்சி; கோலாகல துவக்கம்
திருப்பூர்: திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில், 21வது ஆண்டு கட்டட, கட்டுமானப் பொருள் கண்காட்சி நேற்று தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்படத்தில் துவங்கியது.
கண்காட்சியை எம்.எல்.ஏ.க்கள் பாலமுருகன், சத்யபாமா ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். துவக்க விழாவில் முன்னதாக, செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். சங்க தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார்.
கண்காட்சி தலைவர் ராஜூ கண்காட்சி குறித்து விளக்கினார். விழாவில், பொறியியல் பொக்கிஷம் - 2026 விழா மலர் வெளியிடப்பட்டது. இதனை பட்டயத்தலைவர் சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.
கண்காட்சி செயலாளர் நாகராஜ் நன்றி கூறினார். துவக்கவிழாவில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானப் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் அரங்கு அமைத்துள்ளன.
இவற்றில், கட்டடங்களுக்கு தேவையான, கட்டுமான செலவுகளை குறைக்கும், புது வகை பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
பசுமை கட்டுமானம் சார்ந்த செங்கல், மரம் மற்றும், மரம் சார்ந்த பொருட்கள், மாடர்ன் எலக்ட்ரிக்கல், மற்றும் மாடர்ன் பிளம்பிங் மெட்டீரியல்ஸ், அலங்கார விளக்குகள், 'சிசிடிவி' கேமரா, மாடர்ன் ஹோம் ஆட்டோமேஷன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்கள், பேவர் பிளாக், சோலார், லாக்கர் வகைகள், கண்ணாடி பொருட்கள் மற்றும் பாத்ரூம் பிட்டிங்ஸ் உள்ளிட்ட உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களின் அரங்குகள் பார்வையாளர்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளன.
மேலும் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், புதிதாக வீடு மற்றும் கட்டடம் கட்டுவோர்க்கு இலவச ஆலோசனைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் வடக்கு லயன்ஸ் சங்கம் மற்றும் ரேவதி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது. இலவச கண்சிகிச்சை. காதொலி சிகிச்சை முகாமும், இலவச ரத்த அழுத்தம் மற்றும் பொது மருத்துவ ஆலோசனை முகாமும் நடைபெறவுள்ளது.
கண்காட்சி நிறைவு நாளான, 13ம் தேதி வரை, தினமும் மாலை 6.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மேலும்
-
பெண்கள் பள்ளி இல்லாத திருப்பாசேத்தி
-
வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம் அச்சத்தில் பொது மக்கள்
-
திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு
-
காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
-
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்