கடைமடை பகுதி வரை பாசன நீர் விவசாயிகள் வலியுறுத்தல்
திருப்பூர்: கடைமடை பகுதி வரை பி.ஏ.பி., பாசன நீர் வந்துசேர வேண்டுமென, வெள்ளகோவில் விவசாயிகள் நேற்று கலெக்டரிடம் முறையிட்டனர்.
பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் பாதுகாப்பு சங்கத்தினர், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். காங்கயம், வெள்ளகோவில் சுற்றுப்பகுதிகள், பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கடைமடை பகுதிகள். அப்பகுதிகளுக்கு, ஒதுக்கீடு செய்துள்ள அளவு பாசன நீர் சென்று சேர்வதில்லை என்பது நீண்ட நாள் பிரச்னையாக உள்ளது.
இந்நிலையில், அப்பகுதி விவசாயிகள் நேற்று கலெக்டரை சந்தித்து, கடைமடை பகுதி வரை தண்ணீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். அணையில் இருந்து எடுக்கும் தண்ணீர் அளவு அதிகமாக இருக்கிறது; இருப்பினும், கடைமடைக்கு வந்து சேர்வதில்லை என, கலெக்டரிடம் முறையிட்டனர்.
வெள்ளகோவில் கடைமடை பகுதி விவசாயிகளின் கோரிக்கை குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் அருண்ராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்படும்; உரிய முன்னறிவிப்பு செய்யப்படுமென, கலெக்டர் உறுதி அளித்தார்.
மேலும்
-
இறகுப்பந்து போட்டி
-
நலம் ஏ.ஐ., செயலியில் வாட்ஸ்ஆப் எண்ணில்வீட்டில் இருந்தவாறு வெளிநோயாளி சீட்டு பதிவு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அறிமுகம்
-
போலீஸ் செய்திகள்... விபத்தில் முதியவர் பலி
-
ரூ.14 கோடி வங்கி மோசடியில் வழக்குப்பதிய போலீசார் தாமதம்
-
குறுவட்ட கபடிபோட்டி மாணவிர்கள் ஆர்வம்
-
முதல்வர் விஜய் தலைமையில் 16ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்