வீட்டில் விளக்குகள் அமைப்பதில் தவிர்க்க வேண்டிய குறைபாடுகள்!
ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் முதன் முதலில் கட்டும் சொந்த வீடு குறித்த ஏராளமான எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்த எதிர்பார்ப்புகளை எண்ணங்களாக வெளிப்படுத்துவதைவிட, அதை முதலில் காகித வடிவத்துக்கு கொண்டு வருவது மிக முக்கிய பணியாகும்.
உங்கள் மனதில் உள்ள எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை காகித வடிவத்துக்கு கொண்டு வந்த பின் தான் அதை செயல்படுத்துவதற்கான வழிகளை கண்டுபிடிக்க முடியும். இதில், உரிமையாளர்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கட்டுமான பணிகளை ஏற்கும் நபர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழலில் பெரும்பாலான இடங்களில் கட்டுமான வல்லுனர்கள் தங்களுக்கு எது எளிதாக முடியும் என்று மட்டுமே யோசித்து அதற்கு ஏற்ற வகையில் வீடுகளை கட்டுவதாக கூறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அடிப்படை அளவுகள், வடிவமைப்பை வைத்து கொண்டு அனைவருக்கும் வீடு கட்டுவது என்பது சரியான நடைமுறை அல்ல.
ஒவ்வொரு உரிமையாளரிடமும் முழுமையாக பேசி, அவரது எண்ணங்களை கேட்டறிந்து, அதை காகித வடிவத்துக்கு கொண்டு வந்து, அதன்பின் அதில் எது எப்படி சாத்தியப்படும் என்று பார்க்க வேண்டும். அதைவிடுத்து உரிமையாளர் சொல்லும் முதல் நிலையிலேயே அவரது எண்ணங்களை அலட்சியப்படுத்தக் கூடாது.
பொதுவாக, ஒரு வீட்டை கட்டும் போது அதில் இயற்கையான முறையில் வெளிச்சம் வருவதற்கான வழிமுறைகளை வடிவமைப்பு நிலையிலேயே ஆராய வேண்டும். இதற்கு அடுத்த படியாக, வீட்டுக்குள் இரவில் வெளிச்சம் ஏற்படுத்த விளக்குகள் அமைப்பதற்கான வழிமுறைகளை திட்டமிட வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, உங்களுக்கான புதிய வீட்டில் ஒவ்வொரு அறையிலும் என்ன மாதிரியான விளக்குகள் அமைக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலேயே முடிவு செய்யுங்கள். பொதுவாக அனைத்து வீடுகளிலும் எல்.இ.டி., பல்புகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
இதில், ஒரு அறையின் நீளம், அகலம் அடிப்படையில் அதன் மொத்த பரப்பளவு, உயரம் ஆகிய விபரங்களை பாருங்கள். இந்த விபரங்கள் அடிப்படையில் அங்கு என்ன மாதிரியான விளக்குகள் எவ்வளவு தேதைவப்படும் என்று முடிவு செய்யுங்கள்.
குறிப்பாக, அறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்படும் விளக்கு ஒளிரும் போது, அப்பகுதி முழுவதற்கும் வெளிச்சம் பரவ வேண்டும். இதில் பெரும்பாலான சமயங்களில் எதிரெதிர் சுவர்களில் டியூப் லைட்கள் அமைப்பது வழக்கமாக உள்ளது.
சுவர்களில், மேல் தளத்தில் பீம்கள், அலமாரிகளை ஒட்டி விளக்குகள் அமைத்தால் அதன் வெளிச்சம் எந்த விதத்திலும் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிடும். குறிப்பாக, அலமாரிகளுக்கு பக்கத்தில் விளக்கு அமைப்பதற்கு பதில், அதன் எதிர் திசையில் விளக்குகள் அமைத்தால் பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கும்.
எனவே, வீடுகளில் விளக்குகள் அமைப்பதை அலட்சியப்படுத்தாமல் முறையாக திட்டமிட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.
அறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்படும் விளக்கு ஒளிரும் போது, அப்பகுதி முழுவதற்கும் வெளிச்சம் பரவ வேண்டும், இதில் பெரும்பாலான சமயங்களில் எதிரெதிர் சுவர்களில் டியூப் லைட்கள் அமைப்பது வழக்கமாக உள்ளது.
மேலும்
-
செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு
-
அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
-
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்
-
முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல்
-
வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி