மானியத்தில் தக்கை பூண்டு விதைகள்

போடி, ஜூலை 11 -

இயற்கை உரத்திற்கான தக்கை பூண்டு விதைகள் 50 சதவீத மானியத்தில் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என போடி வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

சாகுபடியில் விவசாயிகள் செயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மண்ணின் தன்மை மாறுகிறது. இதனை தவிர்க்க தக்கை பூண்டு விதைகளை விதைத்து 45 நாட்களில் நன்கு வளர்ந்து பூ பூக்கும் நிலையில் செடிகளை அதே நிலத்தில் உழுது உரமாக பயன்படுத்தலாம். இதனால் சூரிய ஒளி மூலம் செடிகளின் வேருக்கு நைட்ரஜன், புரோட்டின் சத்தும் கிடைக்கிறது. மண்ணின் தன்மை மாறாமல் மண் புழுக்கள் இறக்காமல் உரமாகவும், தலைச் சத்தாவும் பயன்படுகிறது.

வேளாண்துறையில் தக்கை பூண்டு விதைகள் மானியத்தில் வழங்கப் படுகிறது. மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் போக கிலோ ரூ.67 வீதம் ஏக்கருக்கு 20 கிலோ முன்னுரிமையில் ஜூலை 15 முதல் வழங்கப்படுகிறது. விரும்பும் விவசாயிகள் ரேஷன் கார்டு, ஆதார் நகல், போட்டோவுடன் போடி வேளாண் அலுவலகம், உப்புக் கோட்டை, கோடங்கிபட்டி, சிலமலை துணை வேளாண் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என போடி வேளாண் உதவி இயக்குநர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.

Advertisement