பந்தலுார் அருகே குளம் போல மாறிய சாலையால் மக்கள் அவதி
பந்தலுார்: பந்தலுார் அருகே பஞ்சோரா சாலை குளம் போல மாறியுள்ளதால், வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிதர்காடு,- ஆனப்பன் சோலை-, பஞ்சோரா பகுதிகளுக்கு செல்லும் சாலை, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் ஊராட்சி மூலம் சோளிங் சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. சாலையின் ஒரு பகுதி வனமாகவும், மறு பகுதி தனியார் தோட்டமாகவும் உள்ளது. இந்த வழியாக அரசு பஸ் வசதி இல்லாத நிலையில், வாடகை ஆட்டோவில் மட்டுமே மக்கள் பயணிக்க வேண்டும்.
தற்போது, சாலை முழுவதும் குழிகளாக மாறி, குளம் போல காட்சி அளிக்கிறது. வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால், ஆட்டோ மற்றும் ஜீப் ஓட்டுநர்கள் இங்கு வருவதில்லை. இதனால், வனவிலங்கு அச்சத்துடன் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையை முழுமையாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு
-
அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
-
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்
-
முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல்
-
வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி