வி வி ‘மாறுபட்ட கருத்துக்களை மதிக்க கற்க வேண்டும்’

கோவை: இளம் தலைமுறையினரிடம் ஜனநாயக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சி.ஐ.ஐ., மற்றும் யங் இந்தியன்ஸ் சார்பில், ‘யங் இந்தியன்ஸ் நாடாளுமன்றம் 3.0 ’ நிகழ்ச்சி, குமரகுரு கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

கலெக்டர் பவன்குமார் பேசுகையில், ‘‘ அதிகம் பேசுவதைவிட, கவனமாகக் கேட்பதே ஒரு சிறந்த தலைவரின் அடையாளம். இந்தியாவின் பல்வேறு கலாசாரங்கள் மற்றும் பிராந்தியங்களின் தனித்துவத்தைப் புரிந்துகொண்டு, மாறுபட்ட கருத்துக்களை மதிக்கும் பண்பை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்,’’ என்றார்.

இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை ஒத்த விவாதங்கள், சட்டமசோதா கலந்துரையாடல்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பு அமர்வுகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

சிறப்பாக செயல்பட்ட 15 மாணவர்கள் பிராந்திய சுற்றுக்கு தகுதி பெற்றனர். யங் இந்தியன்ஸ் கோவை கிளை தலைவர் ராகுல், ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement