ரேஷன் கடை பணியாளர் சங்க கூட்டம்

கொடைக்கானல், ஜூலை 11-

தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க கூட்டம் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கொடைக்கானலில் நடந்தது. மாநில துணைச்செயலாளர் முருகேசன், இணைச்செயலாளர் தங்கபூமி, செயலாளர் தினேஷ்குமார் நிர்வாகிகள், ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தாயுமானவர் திட்டத்தில் உள்ள சிக்கல்கள், ஈ.கே.ஒய்.சி., திட்டத்தில் முழுமையாக பணிகள் முடித்தல், பிரதி மாதம் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்குதல், அரசு சுற்றறிக்கை படி ரேஷன் கடைகளுக்கு மூட்டை 50, 650 எடையிட்டு நுால் மாற்றி அனுப்புதல், பணியாளர்களுக்கான நிதி பயன்களை வங்கிக்கணக்குகளில் செலுத்துதல், ரேஷன் கடைகளுக்கு கழிப்பிட வசதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement