'என் மண், எண் மக்கள்' தொழிற்சங்கம் துவக்கம்

l பொள்ளாச்சி, உடுமலை, கோவை, சென்னை மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும், துபாயில் இருந்து வந்த அமைப்பை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

l மொத்தம், 1.22 லட்சம் சதுர அடி பரப்பளவில் மாநாடு பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மொத்தம், 20ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

l பொள்ளாச்சியின் பெருமையை உணர்த்தும் வகையில், மாநாடு பந்தலின் முகப்பில் ஆழியாறு அணை, தென்னை மரங்கள், காற்றாலை படங்கள் பிளக்ஸில் இடம் பெற்று இருந்தன.

l மாநாடு நடைபெறும் பகுதியில் 'வீ தி லீடர்ஸ்' என்ற செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு இருந்தது; மாநாட்டுக்கு வந்தோர் ஆர்வமாக நின்று செல்பி எடுத்துச் சென்றனர்.

l குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அவசர தேவைகளுக்காக ஆம்புலன்ஸ், மருத்துவ குழுவும் தயார் படுத்தப்பட்டு இருந்தது.

l போதையில் இருந்து மீள்வது குறித்து மறு வாழ்வு மைய முகாம் வாயிலாக விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது. போதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கும் வகையில் புகைப் பட கண்காட்சி இடம் பெற்று இருந்தன.

l மாநாடு இரு அமர்வாக நடத்தப் பட்டது; முதல் அமர்வு, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், போதையினால் ஏற்படும் பாதிப்புகள், மீள்வது குறித்து டாக்டர்கள் விளக்கமளித்து பேசினர்.

l மாநாடு பந்தலுக்கு வந்த அண்ணாமலையை பலரும் சூழ்ந்தனர்; போலீசார், அவரை பாதுகாப்பாக அழைத்து வந்தனர். மாநாடு மேடையில் விழுந்து கும்பிட்டு அமர்ந்தார்.

l மாநாடு பந்தலில், போதை ஒழிப்பு துாதுவர்களாக, 12 பேர் அறிவிக்கப்பட்டனர். தொடர்ந்து, போதை பொருள் ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப் பட்டது.

l மாநாடு துவங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்தும்; முடிந்த பின், தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. மாநாட்டில், வீ தி லீடர்ஸ் செயலி துவங்கப்பட்டது.

l அண்ணாமலை, 'என் மண், எண் மக்கள்' தொழிற்சங்கம் துவங்கப்பட்டதாக அறிவித்தார். அதில், தொழிற்சங்கத்தினர் சேரலாம் என தெரிவித்தார்.

l மேடைக்கு, 6:55 மணிக்கு வந்த அண்ணாமலை, 7:39 மணிக்கு தனது உரையை முடித்தார். மொத்தம், 45 நிமிடம் பேசினார். இயக்கம் துவங்கிய, 38 நாட்களாக யாரை பற்றியும் தவறாக பேசவில்லை. இதனால், தி.மு.க.,வினர், இந்த இயக்கம், 'பா.ஜ., பி டீம்' என கூறுகின்றனர். அப்படியெல்லாம் கிடையாது. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். யாரையும் விமர்சிக்க வரவில்லை. நான் ஒரு தேசியவாதி, என்றார்.

l நிறைவாக, தன்னார்வ குழுவினருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

l மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளில், அவரது பெயரில் அரசியல் பயிற்சி மையம் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.block_B

Advertisement