கொச்சி - தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி
மூணாறு: மூணாறில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் முடிந்து, நேற்று மாலையில் இருந்து கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு - கொச்சி இடையே சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளுக்காக பழைய மூணாறு சி.எஸ்.ஐ., சர்ச் அருகே மண் எடுக்கப்பட்ட இடத்தில் விரிசல் ஏற்பட்டது.
அங்கு நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டதால் மூணாறில் இருந்து பழைய மூணாறு செல்லும் சாலையில், ஜூலை 4 முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
அங்கு கடந்த மூன்று நாட்களாக நிலச்சரிவை தடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பணிகள் நிறைவடைந்ததால், நேற்று மாலை முதல் அவ்வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement