மின் கம்பி திருட்டால் ரயில் சேவை பாதிப்பு
பாட்னா: பீஹாரின் தெஹ்தா மற்றும் ஜெஹனாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வழிதடத்தில், இருப்புப் பாதைக்கு மேலே செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகளை, மர்ம நபர்கள் நேற்று அதிகாலை வெட்டிச் சென்றனர்.
இந்த துணிகர சம்பவத்தால், சிக்னல்கள் செயலிழந்தன. கயாவில் இருந்து பாட்னா நோக்கி சென்ற பல ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால், பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே தொழில்நுட்பக் குழுவினர், போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மின் கம்பிகளை இணைத்து சிக்னல்களை சரிசெய்தனர். அதன் பிறகே அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் சீரானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு
-
அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
-
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்
-
முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல்
-
வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி
Advertisement
Advertisement