மக்களை தேடி செல்லும் அரசாக நாம் இருக்க வேண்டும் அதிகாரிகள் மத்தியில் முதல்வர் சிவகுமார் பேச்சு

பெலகாவி: ''மக்கள் தேடி வரும் அரசாக இருக்க கூடாது; மக்களை தேடி செல்லும் அரசாக நாம் இருக்க வேண்டும்,'' என, பெலகாவி கோட்ட அதிகாரிகள் மத்தியில், முதல்வர் சிவ குமார் பேசினார்.

முதல்வர் சிவகுமார் நேற்று பெலகாவியில் சுற்றுப்பயணம் செய்தார். அங்குள்ள சுவர்ண விதான் சவுதா சென்ற அவர், மூன்றாவது மாடியில் உள்ள 336 அறையில், தனது அலுவலகத்தை திறந்து வைத்தார். பின், பெலகாவி கோட்ட அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

Tamil News

தனி அமைச்சர் அப்போது அவர் பேசியதாவது:

மாவட்ட, தாலுகா அளவில் உள்ள அலுவலகங்களில், அனைத்து துறைகளின் அதிகாரிகளில் யாராவது ஒருவர் பணியில் இருப்பதை மாவட்ட கலெக்டர்கள், சி.இ.ஓ.,க்கள் உறுதி செய்ய வேண்டும்.

மக்கள் குறைகளை தீர்க்க, மக்கள் சேவை துறை என்று புதிதாக துறை துவங்கப்பட்டுள்ளது. இத்துறைக்கு தனி அமைச்சர் நியமிக்கப்படுவார்.

ஒவ்வொரு மாதம் முதல், மூன்றாம் சனிக் கிழமைகளில் அந்த அமைச்சர், மக்களுடன் நேரடியாக கூட்டங்களை நடத்தி குறைகளை கேட்டு தீர்த்து வைப்பார். மக்கள் தேடி வரும் அரசாக இருக்க கூடாது; மக்களை தேடி செல்லும் அரசாக நாம் இருக்க வேண்டும்.

தொழிற்பூங்கா தகுதியான அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்குவது அரசின் பொறுப்பு. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் யாருடைய அழுத்தத்திற்கு அடிபணியாமல், வீடு, வீடாக சென்று எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம் செய்ய வேண்டும்.

நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமையை பேணுவதற்காக, 'பாரத் ஜோடா யுவ சங்கம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

மாநிலத்தில் 10,000 இளைஞர்கள் சங்கம் அமைக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் ஏழைகளுக்கு வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு தாலுகாவிலும் தொழிற்பூங்கா அமைக்க திட்டம் தயாரிக்கப் படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

டிஜிட்டல் மயம் துணை முதல்வர் பரமேஸ்வர் பேசியதாவது:

முதல்வரின் புதிய யோசனைகள் நிறைய உள்ளன. அவரது விருப்பத்திற்கு ஏற்ப அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். வாக்குறுதி திட்டங்களால் வளர்ச்சி பணிகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுவது முற்றிலும் பொய்.

வட மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைவாக உள்ளது. குடிநீர் பிரச்னை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்து கொள்ள வேண்டும்.

டேங்கர் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுங்கள். நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக வருவாய் துறை, 140 கோடி பக்க நில பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் ருத்ரப்பா லமானி, அமைச்சர் எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கி ஹோளி, காதர், ஈஸ்வர் கண்ட்ரே, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement