செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் செவிலியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் மாவட்ட சுகாதார அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, செவிலியர் சங்க நிர்வாகி ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். சங்கீதா, பூங்கொடி, ரேவதி, மகாராணி, கிளாரா, மணிமேகலை, தில்லைக்கரசி, நளினி, ரேவதி கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கி வரும் திறன் மேம்பாட்டு செவிலியர் பணியிடங்களை, மாற்று பணியிடங்களுக்கு பகிர்வு செய்யும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.

செவிலியர் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளில் புதிய நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்கி, பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் எம்.ஆர்.பி., ஒப்பந்த செவிலியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement