வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது

கடலுார்: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் பாபு,34; இவர் எம்.புதுார் பாக்கியராஜ்,41; மேற்கு ராமாபுரம் சீனிவாசன்,43; டி.புதுார் பாக்கியராஜ்,38; ஆகியோருடன் எஸ்.புதுார்-கிழக்கு ராமாபுரம் செல்லும் புறவழிச்சாலை சர்வீஸ் சாலையில் அமர்ந்து மது அருந்தினார்.

அப்போது, மேற்கு ராமாபுரம் பாக்கியராஜிக்கும், பாபுவிற்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அவர், பாபுவை பீர்பாட்டிலால் தாக்கினார்.

அதனைத் தொடர்ந்து, சீனிவாசன், பாக்கியராஜ் ஆகியோர் பாபுவிடம் பீர்பாட்டிலை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பாபு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து பாக்கியராஜ் உட்பட 3 பேரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement