முருகன் கோயில்களில்கார்த்திகை வழிபாடு
ராமநாதபுரம்: கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம், அதை சுற்றியுள்ள இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் அபிேஷகம், பூஜை, வழிபாடு, அன்னதானம் நடந்தது.
ஆனி மாதம் கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் காலை, மாலை நேர பூஜைகளில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. வழிவிடு முருகன் கோயில், குமரய்யா கோயில், வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணியம் சுவாமி, பாலதண்டயுதபாணி சுவாமி கோயில்.
பட்டணம்காத்தான் வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் நீச்சல் குளம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் முருகப்பெருமானுக்கு அபிேஷகம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
–––
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement