விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி
விருத்தாசலம்: பைக் மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விருத்தாசலம் அடுத்த வீரட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கரந்தை மகன் கந்தன், 42; இவர் கடந்த 5ம் தேதி வீரட்டிக்குப்பம் கிராமத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்தார்.
அப்போது, விருத்தாசலம் அண்ணாநகர் அருகே வந்தபோது, எதிரே வந்த பைக், கந்தன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில், அவர் படுகாயமடைந்தார்.
உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்கு தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோமாலியாவில் சிக்கி தவித்த மீனவர்கள் ஊர் திரும்பினர்
-
மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்ட ரூ.1 கோடி கடல் அட்டை பறிமுதல்
-
விதிகளைத் தளர்த்தி கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தல்
-
வரதட்சணை புகாரில் சமரசம்; இன்ஸ்.,- எஸ்.ஐ.,க்கு அபராதம்
-
சிறுமி கூட்டு பலாத்காரம்; இருவருக்கு 'போக்சோ'
-
சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மருத்துவ முகாம் நடத்த உத்தரவு
Advertisement
Advertisement