வரதட்சணை புகாரில் சமரசம்; இன்ஸ்.,- எஸ்.ஐ.,க்கு அபராதம்
மதுரை: வரதட்சணை புகாரில் வழக்கு பதியாமல் சமரசத்தில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மகளிர் இன்ஸ் பெக்டர், எஸ்.ஐ.,க்கு தலா, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், தன் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்தபோது, மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக புகார் அளித்ததாகவும், மகளிர் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி முடித்து வைத்ததாகவும், உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்.
நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு: பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு மேற்கொண்ட முக்கிய கொள்கை முன்னெடுப்பான, சிங்கப்பெண் சிறப்பு படை அமைக்கப்பட்டது பாராட்டுக்குரியது.
இத்தகைய நடவடிக்கைகளால் உருவான நம்பிக்கையான சூழலுக்கும், சில மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களின் செயல்பாட்டில் வெளிப்படும் கவலைக்குரிய யதார்த்த நிலைக்கும் பெரும் முரண்பாடு நிலவுகிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காக பொறுப்பேற்றுள்ள அமைப்புகள், பல சந்தர்ப்பங்களில், தங்களின் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற தவறுவது முரண்பாடானது.
சட்ட நடைமுறைகளை புறக்கணித்து, சமரச பேச்சு மூலம் தீர்வு காணும் இடங்களாக சில மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
மனுதாரர் விவகாரத்தில் போலீசாரின் அணுகுமுறை சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாதது. சட்டத்தை அமல்படுத்துவதே போலீசாரின் கடமை. அதை நீர்த்துப்போக செய்யும் வகையில் சமரச பேச்சு நடத்துவதல்ல.
கடமை தவறிய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தலா, 1 லட்சம் ரூபாயை உயர்நீதிமன்ற கிளை வளாக சித்த மருத்துவமனை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். வழக்கு பதிவு செய்யாததற்கான காரணம் குறித்து இன்ஸ்பெக்டர் ஜூலை 14ல் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு உத்தர விட்டார்.
மேலும்
-
ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் பள்ளி பால் பேட்மின்டனில் ‘சாம்பியன்’
-
கிரேன் ‘ரோப்’ அறுந்து கோர விபத்து ராட்சத குழாயில் சிக்கி சிறுவன் பலி
-
சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
-
பராமரிப்பு பணிக்காக 41 ரயில் சேவை ரத்து தாம்பரத்தில் கடும் நெரிசல்; பயணியர் அவதி
-
ரயிலில் குட்கா கடத்திய மூன்று பெண்கள் கைது
-
கிரைம் கார்னர்