சிறுமி கூட்டு பலாத்காரம்; இருவருக்கு 'போக்சோ'

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை சேர்ந்தவர், 9ம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமி. இவர், கடந்த, 29ம் தேதி நள்ளிரவில் மாயமானார். அவரது பெற்றோர் சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்தனர்.

போலீசார், சிறுமியை தேடிவந்த நிலையில், கடந்த, 2ல், நாமக்கல் புது பஸ் ஸ்டாண்டில் மீட்கப்பட்டார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சேலம் மாவட்டம், மேச்சேரி அடுத்த புங்கம்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி தமிழரசன், 22, நண்பர் பிரதாப், 23, ஆகிய இருவரும் , மாணவியை, மேச்சேரிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

'போக்சோ' சட்டத்தில், தமிழரசன், பிரதாப் ஆகிய இருவரையும், சேந்தமங்கலம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement