தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு இல்லை; மீண்டும் சொல்கிறது கர்நாடகா
பெங்களூரு: ''கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, விவசாயத்திற்கு திறக்க போதுமான தண்ணீர் இல்லை. கே.ஆர்.எஸ்., அணை நிரம்பும் போது, தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என நம்புகிறேன்,'' என, கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறினார்.
பெங்களூரு விகாஸ் சவுதாவில் உள்ள அலுவலகத்தில், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி: கே.ஆர்.எஸ்., அணையில் தற்போதைக்கு உள்ள நீரை வைத்து, அடுத்த நான்கு மாதங்களுக்கு குடிநீர் தேவையை, எந்த பிரச்னையும் இன்றி பூர்த்தி செய்ய முடியும். ஆனால் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க, அணையில் போதுமான தண்ணீர் இல்லை.
மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகி உள்ளது. இந்த திட்டத்தால், 12,000 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும். மேகதாதுவில் அணை கட்டினால், பெங்களூருக்கு, 7.5 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும். காவிரி தண்ணீரை திறக்கும்படி, தமிழக அரசு எங்களிடம் கேட்கவில்லை' என, நான் கூறியதாக, தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். நான் அப்படி கூறவே இல்லை.
காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் பரிந்துரை அடிப்படையில், தண்ணீரை திறப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டியது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தான். இந்த விவகாரத்தில், கர்நாடக அரசுக்கு எந்த பங்கும் இல்லை. தற்போதைய நிலவரப்படி, காவிரி படுகையில், மோசமான சூழ்நிலை உள்ளது. வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று, கே.ஆர்.எஸ்., அணை நிரம்பும் போது, தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஐயா, தானமும் தர்மமும் அவரவர் விருப்பம் போல் செய்வது, ஆனால் இது ஒரு அட்டா பிரச்சனை. உச்சநீதி மன்ற தீர்ப்பை மதித்தே ஆகவேண்டும். இங்கு தானம் தர்மம் எல்லாம் ப்ரயோஜனம் ஆகாது. அவர்கள் மாநிலத்தில் நீர் பிடிப்பு பகுதிககிளில் நல்ல மழை பெய்திருக்கிறது, இருந்தாலும் நீர் கொடுக்க முடியாது என்றால் அது வெறும் அடாவடித்தனம்.
நாளை ஒருவேளை கர்நாடகாவில் அதிக மழை பெய்து கர்நாடக காவிரி நதியின் அருகில் அமைந்துள்ள கிராமங்கள் மூழ்கி போகும் அபாயம் இருந்தால் கூட தண்ணீர் திறக்கமாட்டீர்களா...? சும்மா வீணாக எதையாவது பேசி பிரச்சினையை அதிகப்படுத்தாதீர்கள். நதிகள், ஆறுகள், மலைகள், கோவில்கள் இவையெல்லாம் தேசத்தின் சொத்து. அதற்கு ஒரு மாநிலம் மட்டுமே உரிமை கூறமுடியாது.
கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் சொல்வதில் எந்த தவறும் இல்லை. தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்.
யாரும், யாருக்கும் தான,தர்மம் செய்ய வேண்டாம். காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை இது. வறட்சி காலத்திலும் இருக்கும் தண்ணீரை உரிய அளவில் பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நடுவர் மன்ற தீர்ப்பு. இதற்கு உரிய வழி காட்டுதல்களும் இருக்கின்றன. இப்போதே இப்படி? இன்னும் மேக தாது அணை கட்டப் பட்டால் வெள்ள காலத்தில் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா சம்மதிக்காது.மேலும்
-
சோமாலியாவில் சிக்கி தவித்த மீனவர்கள் ஊர் திரும்பினர்
-
மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்ட ரூ.1 கோடி கடல் அட்டை பறிமுதல்
-
விதிகளைத் தளர்த்தி கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தல்
-
வரதட்சணை புகாரில் சமரசம்; இன்ஸ்.,- எஸ்.ஐ.,க்கு அபராதம்
-
சிறுமி கூட்டு பலாத்காரம்; இருவருக்கு 'போக்சோ'
-
சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மருத்துவ முகாம் நடத்த உத்தரவு