சேப்பாக்கத்தில் 'பிக் பாஷ் லீக்' போட்டி
சென்னை: 'பிக் பாஷ் லீக்' போட்டி வரும் டிச. 12ல் சென்னை, சேப்பாக்கத்தில் நடக்கவுள்ளது.
ஆஸ்திரேலியாவில், கடந்த 2011 முதல் 'பிக் பாஷ் லீக்' கிரிக்கெட் தொடர் ('டி-20') நடத்தப்படுகிறது. இதுவரை 15 சீசன் நடந்துள்ளன. இதில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி, அதிகபட்சமாக 6 முறை சாம்பியன் பட்டம் வென்றது. இதன் 16வது சீசன், வரும் டிச. 12ல் ஆரம்பமாகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன.
அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றார் இந்திய பிரதமர் மோடி. அங்கு, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நேற்று, பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீசுடன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை பார்வையிட்டார். அங்கு, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக்கை சந்தித்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ''ஆஸ்திரேலிய உள்ளூர் 'டி-20' தொடரான 'பிக் பாஷ் லீக்' 16வது சீசனுக்கான முதல் போட்டி வரும் டிச. 12ல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படும்,'' என்றார்.
இதன்மூலம் இந்திய மண்ணில், முதல் முறையாக வெளிநாட்டு கிரிக்கெட் லீக் தொடருக்கான போட்டி நடக்கவுள்ளது.
மேலும்
-
செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு
-
அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
-
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்
-
முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல்
-
வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி