இந்தியாவுக்கு மூன்று வெண்கலம் * ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...

1

ஆர்டோஸ்: ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் நேற்று இந்தியாவுக்கு மூன்று வெண்கலப் பதக்கம் கிடைத்தன.
சீனாவில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் முதல் சீசன் நடக்கிறது. பெண்களுக்கான 800 மீ., ஓட்டம் நடந்தது.
இந்தியாவின் புமேஷ்வொரி தேவி, 2 நிமிடம், 10.20 வினாடி நேரத்தில் வந்து வெண்கலம் பதக்கம் கைப்பற்றினார். உஸ்பெகிஸ்தானின் ஜோன்பிபி (2:08.41), ஜப்பானின் குருமி (2:09.42) தங்கம், வெள்ளி வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை வைஷ்ணவி (2:10.83) 5வது இடம் பிடித்தார்.
ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஷகீல், (1 நிமிடம், 48.78 வினாடி) வெண்கலப் பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அபே சிங் (20.96 வினாடி) வெண்கலம் வென்றார். இதுவரை இந்தியா, 1 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என 9 பதக்கம் வென்றுள்ளது.

Advertisement