வேம்பத்துாரில் முறிந்த மின்கம்பம்: அச்சத்தில் பொது மக்கள்

மானாமதுரை:வேம்பத்துாரில் விநாயகர் கோவிலுக்கு அருகே உள்ள மின்கம்பம் முறிந்து விழும் நிலையில் உள்ளதால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர்.

வேம்பத்துாரில் முளக்குளம் செல்லும் ரோட்டில் சிவன் கோயில் எதிரே விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகே உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து சிமென்ட் பூச்சுகள் கீழே விழுந்து கம்பி துருப்பிடித்து மின் கம்பம் எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள்,பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மின்வாரிய அதிகாரிகள் மின் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement