அமெரிக்க ரிசர்வ் வங்கி பொருளாதார கண்காணிப்பு குழுவில் இந்தியர்கள் மூவர்!
நமது நிருபர்
அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வெவ்வேறு கண்காணிப்பு குழுக்களில், இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார நிபுணர் ராஜ் ஷெட்டி, மைக்ரோசாப்ட் செயல் துணைத்தலைவர் ஆஷா சர்மா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான ரகுராம் ராஜன், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், மத்திய வங்கியின் நிதிக் கொள்கையை நவீனப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ஐந்து முக்கிய நிபுணர் குழுக்களில் ஒரு குழுவில் இவர் உறுப்பினராகச் செயல்படுவார்.
அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர் கெவின் வார்ஷ் தலைமையிலான இந்த குழு, வங்கியின் சொத்து இருப்பு, நிதிக் கொள்கைகளைச் செயல்படுத்துதல் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும். அதேபோல் வெவ்வேறு கண்காணிப்பு குழுக்களில் பொருளாதார நிபுணர் ராஜ் ஷெட்டி, மைக்ரோசாப்ட் செயல் துணைத்தலைவர் ஆஷா சர்மா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழுக்களில் மூன்று இந்திய வம்சாவளி நிபுணர்கள் இடம்பெற்று இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பணிக்குழுக்களில் நோபல் பரிசு பெற்ற தாமஸ் சார்ஜென்ட், வால்மார்ட் முன்னாள் சிஇஓ டக் மெக்மில்லன் ஆகியோரும் இடம்பெற்று இருக்கின்றனர்.
நம்ம ரகுராம் ராஜன் தீய சக்திக்கு கூட ஆலோசகர்தான் திராவிட மாடலுக்கு ஒவ்வாத சமுதாயத்தை சார்ந்தவர்தான் ஆனாலும் எல்லாரும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டாங்க கிடைச்சது டாஸ்மாக் பொருளாதாரம். திருமாவை கேளுங்க இவரை நியமிச்சிபோது அவரு என்ன பண்ணிக்கிட்டு இருந்தாருன்னு.
நம்ம ஊர் டபிள் வாட்ச் டக்ளஸ் அ மறந்துட்டீங்களே அவரும் இந்த குழுவில் இருந்து இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்த்துக்கொண்டேன்
டபுள் வாட்ச் மட்டுமில்லை தேர்தலில் ஓட்டு போட வாட்ச் மேல மதுரை மல்லியை சூடிச்சென்ற கோமான்..
எங்கள் லயோலா மணி, பழைய லியோனி போன்ற மேதைகளை கூப்பிடுங்கள். அமெரிக்கா எல்லாம் அமோகமா ஆகிவிடும்.
ரகுராம் ராஜனா ???? ஐயோ பாவம்… அமெரிக்கா ரிசர்வ் வங்கி .. .
அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியர்கள் / இந்திய வம்சாவளியினர் நல்ல ஆலோசனை சொல்வார்கள் ன்னு அமெரிக்கா நினைக்குது ..... அமெரிக்காவோட பொருளாதாரம் மேம்படுதோ இல்லையோ இவங்க பொருளாதாரம் நிச்சயம் எகிறும் .....
Why Bhaskar Rajan?
Becuse he is a Lucky Bashkar rajan ...
ரகுராம் ராஜன் இதற்கு பொருத்தமானவர். இந்தியாவில் எப்படி பொருளாதாரத்தை நாசப்படுத்தினாரோ அதுபோல் அமெரிக்காவிலும் செய்வார்.
நல்லதுதானே
இந்தியாவுக்கு எதிரான வரிகளைப் பற்றி முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னரான ரகுராம் ராஜன் ஏளனமாக கேலி செய்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அமெரிக்காவை பொறுத்தவரை இந்தியாவை மட்டம் தட்டும் ஆட்கள்தான் அவர்களுக்கு தேவை. ஆனால் நம்மை பொறுத்தவரை இந்த ரகுராம்ராஜன் நமக்கு தேவையில்லாத ஆணி...
முன்னணி நடிகர்களோ நடிகைகளோ இல்லாத இந்த நியமனத்தை ஏற்கமுடியாது.
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே! நமக்கு சினிமா நட்சத்திரங்கள் தான் மேதைகள்! அறிவாளிகள்!
இது ஒரு பெருமையான வரவேற்கத்தக்க விஷயம் என்று நான் கருதமாட்டேன். இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் படித்து அங்கு சென்று அந்த நாட்டு வங்கியின், அந்த நாட்டின் வளர்ச்சிக்காக பணிசெய்வது ஒருவிதத்தில் தேசதுரோகம் இல்லையா?
வேலை வாய்ப்புகளுக்கான இட ஒதுக்கீட்டு முறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு அரசிடம் கோருங்கள்.
என்னங்க பண்றது. இங்கே இருந்தால் திமுகவின் நான்காம் தலைமுறை கொள்ளுபேரனை தலைவனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு போஸ்டர் ஒட்ட வேண்டும். அதனால் தப்பித்து ஓடுகிறார்கள்.
இந்தியா பயன்படுத்த தவறியதை அமெரிக்கா சரியாக பயன்படுத்தி கொள்கிறது அவ்வளவு தான்
இங்கு ஆளும் அரசுக்கு தலையாட்டி பொம்மையாக இருப்பவர்கள் தான் வேண்டும்
கவலைப்படாதீர்கள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக திராவிட மன்னன் ஸ்டாலின் இந்த 5 பேரை நியமித்தார். அவர்கள் ஆலோசனை தந்த லட்ஷணம் , தமிழ்நாட்டு கடன் 5 லட்சம் கோடி கூடியது. . அமெரிக்காவின் நிலை என்னவாகும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள். கீழே உள்ள பட்டியலில், இரண்டாம் இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று பாருங்கள். அதே ரகுராம் ராஜன்.
எஸ்தர் டுஃப்லோ: உலகளாவிய வறுமையைக் குறைப்பது எப்படி என்று ஆய்வு செய்யும், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் MIT சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்.
ரகுராம் ராஜன்: இந்திய ரிசர்வ் வங்கியின் RBI முன்னாள் ஆளுநர் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.
அரவிந்த் சுப்ரமணியன்: இந்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர்.
ஜீன் ட்ரேஸ்: சமூக நலன், பசி மற்றும் பொது சுகாதாரம் குறித்த தனது பணிகளுக்காக அறியப்பட்ட ஒரு வளர்ச்சிப் பொருளாதார நிபுணர்.
எஸ். நாராயண்: அரசாங்க வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் நிர்வாகம் குறித்த ஆழ்ந்த அறிவை வழங்கிய முன்னாள் மத்திய நிதிச் செயலாளர்.மேலும்
-
புதுச்சேரி போலி மருந்து விசாரணையில் 'பகீர்': சட்ட விரோத தமிழக குடோனுக்கு 'சீல்' :625 வகை மாத்திரைகள் தயாரித்தது அம்பலம்
-
எதிர்ப்பால் சுத்திகரிப்பு நிலைய பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு
-
2 டன் அரிசி கருகியது
-
காரைக்குடியில் இருந்து இயங்கும்எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் மானாமதுரை வரை நீட்டிக்கப்படுமா
-
காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
-
புத்தகங்கள் வாங்குவதை ஊக்குவிக்க மாணவர்களுக்கு சேமிப்பு உண்டியல்