காசியை மாற்றியமைக்க கங்கை, வருணா வழித்தடங்கள்; ரூ.25,000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
புதுடில்லி: கங்கை மற்றும் வருணா ஆகிய இரட்டை வழித்தடங்கள், வாரணாசிக்கு போக்குவரத்து வசதியை பெருமளவில் மேம்படுத்த உள்ளன. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வருணா நதிக்கரையோரம் 6/4 வழிச்சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு 10 ஆயிரத்து 998 கோடி ரூபாய். கங்கை நதிக்கரையோரத்தில் 14 ஆயிரத்து 448 கோடி ரூபாயில் ஆறு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வாரணாசிக்கு போக்குவரத்து வசதியை பெருமளவில் மேம்படுத்த மொத்தமாக ரூ.25 ஆயிரம் கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வாரணாசியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் வேளையில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது இந்த நகரத்திற்கு ஆண்டுதோறும் 15 கோடி சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள் வருகின்றனர். இதனால், அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய உள்கட்டமைப்பு அத்தியாவசியமாகிறது. கங்கை மற்றும் வருணா வழித்தடத் திட்டங்கள் நகர்ப்புற மேம்பாட்டிற்கு முக்கியமானதாகும்.
46 கி.மீ நீளமுள்ள ஆறு வழி கங்கை உயர்மட்டச் சாலையானது , கங்கை நதிக்கரையோரமாக NH-19-ஐ வாரணாசி சுற்றுச் சாலையுடன் இணைக்கும். இந்த விரைவுச்சாலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், பயண நேரம் 60 நிமிடங்களிலிருந்து வெறும் 20 நிமிடங்களாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. வாரணாசியில், இந்த இரட்டைத் திட்டங்கள் சுற்றுலா மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும், நகரத்திற்கு ஒரு புதிய அடையாளமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை அழிக்காம மோடியும் பாஜாகாவும் கண் மூடாது போல..
prem,... உன் குடும்பம் பிழைக்கும்
கோதாவரி காவிரி இணைப்புத் திட்டம் கைவிடப்பட்டது.அதை ஏன் மீண்டும் செயல்படுத்தக் கூடாது
இது வரைக்கும் கொட்டுன 30000 கோடி ஆத்தோட போயாச்ச்சு..
Pm cares நமக்கு நாமம், நமோ செயலி நமக்கு நாமம், பிஜேபிக்கு ஓட்டு போடுபவன் அறிவே இல்லாதவன், சொந்த நாட்டில் SIR kondu vanthu 20% பேரை அகதிகள் ஆக்கிய நல்லவன் அரசாங்கம்
பிரதமரின் தொகுதி மற்றும் நிதின் கட்கரி தொகுதி களில் ஏகப்பட்ட நிதிகளுடன் வளர்ச்சி திட்டங்கள் ,,அடுத்து டில்லி மும்பை நகரங்கள் வளர்ச்சியடைகின்றனமேலும்
-
புதுச்சேரி போலி மருந்து விசாரணையில் 'பகீர்': சட்ட விரோத தமிழக குடோனுக்கு 'சீல்' :625 வகை மாத்திரைகள் தயாரித்தது அம்பலம்
-
எதிர்ப்பால் சுத்திகரிப்பு நிலைய பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு
-
2 டன் அரிசி கருகியது
-
காரைக்குடியில் இருந்து இயங்கும்எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் மானாமதுரை வரை நீட்டிக்கப்படுமா
-
காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
-
புத்தகங்கள் வாங்குவதை ஊக்குவிக்க மாணவர்களுக்கு சேமிப்பு உண்டியல்