பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி; சிபிசிஐடி விசாரணை தீவிரம்
நமது நிருபர்
பழநி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் எப்ஐஆர் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள கார்பார்க்கிங் நிலத்தை ரூ.2 கோடிக்கு பதிவு செய்து மோசடி நடந்துள்ளது. சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஏற்கனவே, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டநிலையில், மாவட்ட பதிவாளர் சசிகலாவும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி.,யை ஒரு தரப்பாக இந்நீதிமன்றம் தானாக முன்வந்து சேர்த்துக்கொள்கிறது.
அதன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை மனுதாரரை கைது செய்யக்கூடாது என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது. தற்போது திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. அஜய் தங்கம் தலைமையில், 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 15 போலீசார் முதற்கட்ட தகவல் அறிக்கை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
-
புதுச்சேரி போலி மருந்து விசாரணையில் 'பகீர்': சட்ட விரோத தமிழக குடோனுக்கு 'சீல்' :625 வகை மாத்திரைகள் தயாரித்தது அம்பலம்
-
எதிர்ப்பால் சுத்திகரிப்பு நிலைய பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு
-
2 டன் அரிசி கருகியது
-
காரைக்குடியில் இருந்து இயங்கும்எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் மானாமதுரை வரை நீட்டிக்கப்படுமா
-
காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
-
புத்தகங்கள் வாங்குவதை ஊக்குவிக்க மாணவர்களுக்கு சேமிப்பு உண்டியல்