துள்ளி எழுந்தது பாட்டு

மயாமி: உலக கோப்பை காலிறுதியில், பாடகி எல்லீ கோல்டிங் அசத்த காத்திருக்கிறார்.
உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரபல பாடகர்கள் பங்கேற்பது வழக்கம். 2010ல் கொலம்பிய பாடகி ஷகிராவின் வாக்கா...வாக்கா' பாடல் 'ஹிட்' ஆனது.


இம்முறை, துவக்க விழாவில் அதிகாரப்பூர்வ 'டாய்...டாய்' பாடலை ஷகிரா, நைஜீரிய பாடகர் பர்னா பாய் இணைந்து பாடினர். ஜூலை 20ல் நியூஜெர்சி மைதானத்தில் நடக்கும் பைனலில் மடோனா, ஷகிரா, பாடகர் ஜஸ்டின் பீபர் உள்ளிட்ட பெரும் பட்டாளமே இசை மழையில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

இதற்கிடையே, மயாமி, ஹார்டு ராக் மைதானத்தில் நடக்க உள்ள இங்கிலாந்து, நார்வே இடையிலான காலிறுதி போட்டியிலும், இசை விருந்து காத்திருக்கிறது. முதல் பாதி முடிந்ததும், இங்கிலாந்து பாடகி எல்லீ கோல்டிங், இனிமையான குரலில் அசத்த உள்ளார். இந்த செய்தியை கால்பந்து 'ஜெர்சி' அணிந்து, படுக்கையில் இருந்து துள்ளி குதிக்கும் தனது 'போட்டோ' உடன் சமூகவலைதளத்தில் உற்சாகமாக வெளியிட்டுள்ளார்.

அதில்,'இங்கிலாந்து, நார்வே மோதும் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். எதுவும் நடக்கலாம். ஆனாலும் இங்கிலாந்து வீரர்கள் தாய்நாட்டுக்கு பெருமை சேர்ப்பர் என நம்புகிறேன்,'என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement