மீண்டும் பரவும் சண்டிபுரா வைரஸ்; குஜராத்தில் மூன்று குழந்தைகள் பலி
சபர்கந்தா: குஜராத்தில், சண்டிபுரா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களில் சபர்கந்தா மற்றும் பஞ்ச்மஹால் மாவட்டங்களில் மட்டும் இந்த தொற்று பாதித்த மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக சண்டிபுரா வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 6 வயது குழந்தை குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத்நகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தது.
ராஜஸ்தானை சேர்ந்த அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது. இந்த வார துவக்கத்தில் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 3 மற்றும் 4 வயதுள்ள இரு குழந்தைகள் உயிரிழந்தனர். இதனால் சண்டிபுரா வைரஸ் தாக்குதலுக்கு பலியான குழந்தைகள் எண்ணிக்கை மூன்று ஆக அதிகரித்துள்ளது.
ஹிம்மத்நகர் அரசு மருத்துவமனையில் சண்டிபுரா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜூன் 26 முதல் ஜூலை 9 வரை சண்டிபுரா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் ஏழு குழந்தைகள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிராவின் சண்டிபுரா கிராமத்தில் முதன்முதலில் 1965ம் ஆண்டு இந்த வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. இதனால் அந்த கிராமத்தின் பெயரால் 'சண்டிபுரா வைரஸ்' என அழைக்கப்படுகிறது.
குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திராவில் இந்த நோய் பாதிப்பு உள்ளது. கடந்த 2024ல் நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் இந்த நோய் பரவியது. இரு ஆண்டுக்கு பின் இப்போது குஜராத்தில் மீண்டும் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
@block_B@ எப்படி பரவுகிறது?
சண்டிபுரா வைரஸ் மணல் ஈக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. கொசுக்கள் மற்றும் உண்ணிகள் மூலமும் இந்த நோய் பரவும். பெரும்பாலும் 15 வயதுக்கு உட்பட்டோரை இந்த நோய் தாக்குகிறது. 'இந்த வைரஸ் மனித உடலுக்குள் நுழைந்த சில மணி நேரங்களிலேயே மூளையை தாக்கி மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இதை தொடர்ந்து காய்ச்சல், தொடர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுவதுடன் தலைவலியும் ஏற்பட்டு குழந்தைகள் மயக்கமடைகின்றனர். அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்த நோய் பாதித்த குழந்தைகள் உயிரிழக்கின்றனர்' என பிரபல மருத்துவ நிபுணர் சுமித் ஜெயின் தெரிவித்தார்.block_B
மேலும்
-
அக்காமலை ரோட்டில் வாகன ஓட்டுநர்கள் அவதி
-
செய்தி மட்டும் திருப்போரூர் பேரூராட்சியில் 200 மரக்கன்றுகள் நடவு
-
செம்மண் நிலத்தில் கருடன் சம்பா நெல் சாகுபடி
-
காட்டுப்பாக்கத்தில் வரும் 17ல் பழங்களில் மதிப்பு கூட்டிய பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி
-
மின்வாரிய அலுவலகத்திற்கு புது கட்டடம் கோரும் மக்கள்
-
வண்டலுார் ---– கேளம்பாக்கம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அச்சம்