ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் பள்ளி பால் பேட்மின்டனில் ‘சாம்பியன்’
சென்னை: ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான பால் பேட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை கல்லுாரி சார்பில், அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான பால் பேட்மின்டன் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்தது.
இதில், 36 அணிகள் பங்கேற்றன. ‘நாக் அவுட்’ சுற்றுகளை வெற்றிகரமாக கடந்த திருவிடைமருதுார் டி.ஏ.எச்., பள்ளி, மயிலாடுதுறை கிளியனுார் அரசு பள்ளி, விருதுநகர் வத்திராயிருப்பு ஹிந்து அரசினர் பள்ளி மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய அணிகள் சூப்பர் லீக்கிற்கு முன்னேறின.
சூப்பர் லீக் சுற்றில், வத்திராயிருப்பு ஹிந்து அரசினர் பள்ளி அணி, கிளியனுார் அரசு பள்ளியை 35- – 17, 35 – -16 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, தன் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
மற்றொரு ஆட்டத்தில், திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி, கிளியனுார் அரசு பள்ளியை 35- – 30, 35- – 12 என்ற கணக்கில் தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றது.
அனைத்து போட்டிகள் முடிவில், திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. திருவிடைமருதுார் டி.ஏ.எச்., பள்ளி இரண்டாம் இடத்தையும், மயிலாடுதுறை கிளியனுார் அரசு பள்ளி மற்றும் வத்திராயிருப்பு ஹிந்து அரசினர் பள்ளி அணிகள் இணைந்து மூன்றாம் இடத்தையும் பிடித்தன.