லாட்டரி விற்றவர் கைது

வெண்ணந்துார்:வெண்ணந்துார் தினசரி மார்க்கெட் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உத்தரவுப்படி, எஸ்.ஐ., கீதாலட்சுமி தலைமையிலான போலீசார், தினசரி மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள டீக்கடையில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த வெண்ணந்துார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைசாமியின் மகன் பூபதி, 36, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement