கர்ப்பிணி பெண்களின் விபரம் முறையாக பராமரிக்க அறிவுரை
சேந்தமங்கலம்:கொல்லிமலை
தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு வளர்ச்சி
திட்டப்பணிகளை, கலெக்டர் மதுபாலன் ஆய்வு செய்தார்.
இதில், பவர்காடு
மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேனுார்பட்டி,
திருப்புளிநாடு, வாழவந்திநாடு, சோளக்காடு அரசு ஆரம்ப சுகாதார
நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு, அங்கன்வாடி பணியாளர்களிடம்
மையத்திற்கு வரும் குழந்தைகளின் எடை, உயரம், கர்ப்பிணி பெண்களின்
விபரம் முறையாக கணக்கெடுத்து பராமரிக்கும்படி அறிவுறுத்தினார்.தொடர்ந்து,
செங்கரை, எடப்புளி நாடு அரசு ஏகலைவா மாதிரி உண்டு
உறைவிடப்பள்ளியில், சமையலறை மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதியை
பார்வையிட்டு, மாணவ, மாணவியரின் கற்றல் திறன் குறித்து
கேட்டறிந்தார். மேலும், கொல்லிமலை வனச்சரகத்திற்குட்பட்ட
அரியூர்நாடு காப்புக்காடு இரவு வான்வெளி பூங்காவை பார்வையிட்டு,
அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
திண்ணனுார் நாடு
தாவரவியல் பூங்காவின் செயல்பாடுகள், சோளக்காடு பகுதியில்
செயல்பட்டு வரும் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு
சங்கங்கத்தில் பால் தர பரிசோதனை கருவி, பால் கேன் குளிர்விப்பான்
ஆகியவற்றை பார்வையிட்டு, கலெக்டர் மதுபாலன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும்
-
செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு
-
அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
-
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்
-
முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல்
-
வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி