சேலம், நாமக்கல்லில் 4.79 டன் விதை விற்க தடை
சேலம்:சேலம்,
நாமக்கல் மாவட்டங்களில், அரசு, தனியாருக்கு சொந்தமான, 728 விதை
விற்பனை நிலையங்களில், கடந்த ஜூனில் சோதனை மேற்கொண்டு, 373 விதை
மாதிரிகள் எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன. அவற்றில்,
ஆத்துார், தலைவாசலில் தலா, 5, ஓமலுாரில், 4, சங்ககிரியில், 2,
நாமக்கல், 3, திருச்செங்கோட்டில், 4 நிறுவனங்கள் என, 23 மாதிரிகள்
தரமற்றது என கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், 21 நிறுவனங்கள்
மீது துறை நடவடிக்கை மேற்கொண்டு, 4.79 டன் விதை விற்க தடை
விதிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு, 17.42 லட்சம் ரூபாய். மீதி, 2
நிறுவனங்கள் மீது, நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கை
எடுக்கப்பட உள்ளது என, சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா
தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீட்டில் விளக்குகள் அமைப்பதில் தவிர்க்க வேண்டிய குறைபாடுகள்!
-
கட்டுமான பொருள் கண்காட்சி; கோலாகல துவக்கம்
-
'கருணாநிதி குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் தி.மு.க., துரோகம்'
-
'மேகதாது அணை கட்டாமல் தடுக்க அரசு நடவடிக்கை'
-
கோவில் நிலங்களை தனியாருக்கு எப்படி பட்டா வழங்க முடியும்? முதல்வர் விளக்கமளிக்க பா.ஜ., வலியுறுத்தல்
-
கடைமடை பகுதி வரை பாசன நீர் விவசாயிகள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement