அரசு மகளிர் பள்ளி எதிரே மது அருந்த தடைவிதிப்பு
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம்
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில் உள்ள ஆவாரங்காடு
பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி
எதிரே சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை, கஞ்சா, போதை பொருட்கள்
விற்பனை நடந்து வருகிறது.
இதனால் பள்ளி எதிரில் எந்நேரமும்,
'குடி'மகன்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மது
பாட்டில் வாங்கியவுடன், பள்ளி எதிரிலேயே வைத்து குடிக்கின்றனர்.
இதனால் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,
அரசு மகளிர் பள்ளி எதிரில் மது அருந்த பள்ளிப்பாளையம் நகராட்சி
எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில்,
'பள்ளிப்பாளையம் நகராட்சி முக்கிய அறிவிப்பு, பள்ளிகள் அமைந்துள்ள
பகுதியாக உள்ளதால் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவது,
புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவைகளை முற்றிலும் தடை
செய்யப்பட்டுள்ள பகுதியாக தெரிவிக்கப்படுகிறது. தடை
செய்யப்பட்ட பகுதியில் மீறி வாகனங்கள் நிறுத்துவது, மது அருந்துதல்,
புகைபிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், போலீசார் மூலம் தக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என,
எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு
-
அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
-
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்
-
முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல்
-
வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி