விவசாயிகளிடம் லஞ்சமாக பெற்ற 6.14 லட்சம் ரூபாய் பறிமுதல்; லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

8


தஞ்சாவூர்: விவசாயிகளிடம் லஞ்சமாக பெற்ற 6.14 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர், ஒரத்தநாடு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், குறுவை தொகுப்பு திட்டத்தில் விண்ணப்பம் பெற லஞ்சம் பெற்று வருவதாக புகார்கள் எழுந்தது. அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர்.
அப்போது விவசாயிகளிடம் லஞ்சமாக பெற்ற, 6.14 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement