டாக்டர்களின் அதிக பணிச்சுமை  தடுக்க சட்டத்தில் இடமுள்ளதா?

* ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீஸ் சோதனையில் சிக்கினால், மூச்சு பரிசோதனை கருவி (பிரீத் அனலைசர்) அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியுமா?

மூச்சு பரிசோதனை கருவியில் இருந்து, பரிசோதனை முடிந்த உடனே எடுக்கப்பட்ட முடிவின் அசல் ஆவணத்தை மட்டுமே ஏற்க வேண்டும். தட்டச்சு செய்யப்பட்ட 'பிரீத் அனலைசர்' அறிக்கையை, எப்.ஐ.ஆர். உடன் கோர்ட்டில் சமர்ப்பித்தால் செல்லாது. தட்டச்சு அறிக்கைக்கு எந்த சான்றிதழ் மதிப்பும் கிடையாது. மூச்சு பரிசோதனை முடிவில் உபகரணத்தில் எடுக்கப்பட்ட அசல் அச்சு மட்டுமே செல்லும் என்று கேரள ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

* மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு பணிச்சுமை அதிகம். ஒரு பேக்டரி ஒர்க்கர் போல வேலை வாங்குகின்றனர். இதற்கு சட்டத்தில் நிவாரணம் உள்ளதா?

மருத்துவமனைகளில் டாக்டர்களை ஒரு பேக்டரி ஒர்க்கர் போல நடத்த கூடாது. மனம்போன போக்கில் சட்டத்திற்கு புறம்பாக மருத்துவமனைக்கு சாதகமாக, டாக்டர்களுக்கு எதிரான ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்ளுதல் கூடாது என்று, சென்னை ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

- வக்கீல் சண்முகம்

ரேஸ்கோர்ஸ்.

Advertisement