ஹைட்ரஜனில் இயங்கும் முதலாவது ரயில்: ஜூலை 17ல் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி

1

புதுடில்லி: ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் முதலாவது ரயில் சேவையை ஜூலை 17ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

மக்களுக்கு சேவை அளித்து வரும் ரயில்வே துறையை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மின் ரயில்கள், மெட்ரோ, வந்தே பாரத் போன்ற ரயில்கள் பயன்பாட்டில் இருக்கிறது. புல்லட் ரயிலுக்கான பணிகளும் செயல்பாட்டில் உள்ளது.

இந் நிலையில், நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜூலை 17ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகம் ஆகிறது.

பெட்ரோல், டீசல், மின்சாரம் இல்லாமல் ஹைட்ரஜன் எரிபொருளை மட்டுமே கொண்டு, மணிக்கு 140 கிமீ வேகத்தில் இந்த ரயில் செல்லும். ரயிலின் குதிரைத் திறன் 1200 ஆகும்.

சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட ரயில், ஹரியானாவில் முதல் கட்டமாக 89 கிமீ நீளமுள்ள ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் மணிக்கு 75 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. தினமும் இந்த ரயில் இயக்கப்படும். ஒரு டிக்கெட் விலை ரூ.5 முதல் ரூ.25 வரை இருக்கும்.

ஜூலை 17ம் தேதி ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Advertisement