ஆம்புலன்ஸ் 108 ல் பெண்ணுக்கு பிரசவம்

சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ஐஸ்வர்யா 23. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் 108ஐ தொடர்பு கொண்டுள்ளார். ஆம்புலன்ஸ் 108 பணியாளர்கள் கர்ப்பிணி ஐஸ்வர்யாவை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக கீழச்செல்வனுார் வரும் போது பிரசவ வலி அதிகமானது.

இதனால் ஆம்புலன்ஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டு அவசர கால மருத்துவ தொழில் நுட்ப பணியாளர் நாகேஸ்வரி மற்றும் டிரைவர் வாழவந்த ராஜா ஆகியோர் ஆம்புலன்ஸ்சில் வைத்து பிரசவம் பார்த்தனர். இதில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் ஐஸ்வர்யாவின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் 108 பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

––

Advertisement