நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி விழுந்து பலி

உத்தமபாளையம், ஜூலை 13-–

உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி மணிவண்ணன் 41. எரசக்கநாயக்கனூர் யாதவர் தெருவில் வசித்து வருகிறார். சின்னமனூரிலிருந்து எரசக்கநாயக்கனூர் நோக்கி டூவீலரில் சென்றார். வழியில் செங்கல் காளவாசல் அருகே சென்ற போது நாய் ரோட்டின் குறுக்கே ஓடியது. இதனால் டூவிலரில் இருந்து தடுமாறி மணிவண்ணன் கீழே விழுந்து காயமடைந்தார். சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். அவரது தந்தை கோபால் புகாரில் சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement