பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கம்பம், ஜூலை 13–

கம்பம் ராம்ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் சேர்மன் சவுந்தராஜன் தலைமை வகித்தார். தாளாளர் கவிதா முன்னிலை வகித்தார். முதுநிலை முதல்வர் சுவாதி வரவேற்றார். ஈரோட்டை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் குலசேகரன் பேசுகையில், இயற்கையை பாதுகாக்க வேண்டும். மாணவர்களிடம் இயற்கையை பாதுகாக்கும் வல்லமை உள்ளது. அதே போல் பண்டைய கால நாகரீகத்தை தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார். சுற்றுச்சூழல் தொடர்பாக நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Advertisement