ரூ.81,000 கோடி சொத்துக்கள் முடக்கம்: உரிமையாளர்களை தேடும் ஈ.டி., அதிகாரிகள்
சென்னை: எப்போதும் இல்லாத வகையில், 2025 - 26ம் நிதியாண்டில், நாடு முழுதும் முறைகேடு புகார்கள் தொடர்பாக, 81,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, ஈ.டி., எனப்படும், அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற புகார்கள் அடிப்படையில், அமலாக்கத் துறை பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி வைக்கும்.
முடக்கப்படும் சொத்துக்கள், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் வரவில்லை என்பதை உரிமையாளர்கள் உறுதி செய்யும்போது, சொத்துக்கள் முடக்கத்தில் இருந்து விடுவிக்கப்படும்.
இந்நிலையில், ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளில் தான், அதிக சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணம் அதிகமாக புழங்கும் நிலையில், இத்துறை தொடர்பாக கண்காணிப்பை அமலாக்கத் துறை தீவிரப்படுத்தி உள்ளது.
அரசியல்வாதிகள், அதிகாரிகளும் கருப்பு பணத்தை பதுக்க, பினாமிகள் பெயரில் சொத்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சமீப காலமாக அமலாக்கத் துறை பதிவு செய்யும் வழக்குகளில், ரியல் எஸ்டேட் சொத்துக்கள் தான் அதிகமாக பிடிபடுகின்றன. இந்த வகையில், 2025 - 26ம் நிதி ஆண்டில், நாடு முழுதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 81,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், திவால் மற்றும் நொடிப்பு நிலை சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், சொத்துக்களின் உரிமையாளர்கள் குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், உரிமையாளர் யார் என்ற விபரங்கள் தெளிவாகாத நிலையில், 81,000 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
@block_B@
முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் யார் வாயிலாக, யார் பெயரில் வாங்கப்பட்டன; அதற்கான பணம் எப்படி கைமாறியது என்பது குறித்தும், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முன்பு எப்போதும் இல்லாத வகையில், அதிக அளவுக்கு சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பது, ரியல் எஸ்டேட் துறையினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.block_B
துபாய் நிர்வாகியிடம் சொல்லி பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் அல்லது பொய்கள் வெளிவரும்.
ஒருவர் லண்டனிலும், ஒருவர் பெத்தாச்சி இருக்கும் துபாயிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
40 ஆண்டுகளுக்கு மேலாக நிதி மோசடி செய்த நிறுவனங்களின் பல வழக்குகள் முடிவு தெரியாமல் தேங்கிக் கிடக்கிறத. ஒன்று நீதிபதிகளுக்கு இதை தீர்ப்பதற்கு மூளை இல்லையா? அல்லது லஞ்சம் வாங்கிக் கொண்டு சும்மா இருக்கிறார்களா? இல்லை சட்டமே குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறதா? ஒன்றும் புரியவில்லை.
கோபால் பல்பொடி சதுரம் .. ஆமாங்க அதே தான் கோபால் பல்பொடி சதுரம் ... ஜி வட்டம் ஜி சதுரம்.. இன்னும் புரியலையா.. அப்போ உங்களுக்கு கோழிமுட்டை தான் மார்க்.
சந்தேகமே இல்லை, திமுகவினர் இதை செய்திருப்பார்கள், கருப்பு பணத்தை பெருக்க சிறந்த வழியாகும், நில சம்மந்தப்பட்ட பண பரிவர்த்தனைகளை ஆராய்ந்து பார்த்தால் சிக்க வாய்ப்பு உள்ளது
உரிமையாளர்கள் கிடைக்காவிட்டால் என்ன, ஒரு சில கோடிகளை, வேண்டாம் பேராசை, ஒருசில லட்சங்களை என்னைப்போன்ற வருமானமில்லாதவர்களுக்கு கொடுங்கப்பா... புண்ணியமாப்போகும்.
இது தமிழகத்தில் மட்டுமே இருக்க கூடும் .இன்னும் இதுபோன்ற பலமடங்கு அறியப்படாமல் இருக்கலாம் .ஒரு 10 சதவிகிதம் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானமாக அறிவித்தால் இன்னும் பலமடங்கு தமிழகத்தில் மட்டுமே கிடைக்க கூடும் .அரசு சன்மானம் அறிவிக்கவேண்டும் .மேலும்
-
அக்காமலை ரோட்டில் வாகன ஓட்டுநர்கள் அவதி
-
செய்தி மட்டும் திருப்போரூர் பேரூராட்சியில் 200 மரக்கன்றுகள் நடவு
-
செம்மண் நிலத்தில் கருடன் சம்பா நெல் சாகுபடி
-
காட்டுப்பாக்கத்தில் வரும் 17ல் பழங்களில் மதிப்பு கூட்டிய பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி
-
மின்வாரிய அலுவலகத்திற்கு புது கட்டடம் கோரும் மக்கள்
-
வண்டலுார் ---– கேளம்பாக்கம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அச்சம்